காவல்துறையில் பதவி உயர்வு பெற்ற பிகில் பட வில்லன் நடிகர்

தமிழில் திமிரு, கொம்பன், பிகில் போன்ற படங்களில் வில்லனாக நடித்து மக்களிடையே அதிகம் அறியப்படடவர் வில்லன் நடிகர் விஜயன் .இவர் கேரள மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். முன்னாள் இந்திய கால்பந்து வீரரான இவர், இந்திய அணிக்காக 70 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2000 – 2004ம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்துள்ளார். கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் போலீஸ் வேலையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கேரள காவல்துறை தனக்கு பதவி உயர்வு வழங்கி உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் விஜயன். பதவி உயர்வு பெற்ற விஜயனுக்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *