காணாமல் போன சீன கோடீஸ்வரர் ஜாக் மா பொதுவெளியில் தோன்றினார்

சீனாவை சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இந்த நிறுவனத்தின் தலைவராக செயல்பாட்டுவருபவர் ஜாக் மா.இந் நிறுவனத்தின் மதிப்பு 420 பில்லியன் டாலர்.இந்நிறுவனம் மூலம் ஜாக் மா சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தியுள்ளது.இதற்கிடையில் சமீபகாலமாக அலிபாபா நிறுவனத்திற்கும் சீன அரசு அதிகாரிக்களுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான மோதல் ஏற்பட்டது. சீன அரசின் செயல்பாடுகள் தனது நிறுவன வளர்ச்சியை தடுப்பாதாக ஜாக் மா குற்றம்சுமத்தினார்.இதைதொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜாக் மா-வை காணவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியானது. சீன அரசு மீது விமர்சனம் செய்ததால் அதிகாரிகள் ஜாக் மா-வை கைது செய்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்தது.இந்நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜாக் மா இன்று பொதுவெளியில் தோன்றியுள்ளார். சீனாவில் உள்ள ஊரக பகுதிகளை சேர்ந்த 100 ஆசிரியர்களுடன் காணொலி வாயிலாக சந்திப்பு நிகழ்ச்சியில் ஜாக் மா உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜாக் மா, ’இந்த கொரோனா பெருந்தொற்று முடிவடைந்த பின்னர் நாம் மீண்டும் சந்திப்போம்’ என்றார்.இவ்வீடியோவை பிஎன்ஓ செய்தி நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *