நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை போடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,. தமிழக மாநில அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை இன்று அறிவித்துள்ளது.இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 2021 திரையரங்குகளில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் மால்களில் உள்ள தியேட்டர்கள் மற்றும் தனித்து இயங்கும் தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசுழலில் மாரி செல்வராஜ் இயக்கிய நடிகர் தனுஷ் நடித்துள்ள “கர்ணன்” திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால், கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி படம் திரைக்கு வருமா அல்லது தயாரிப்பாளர்கள் திரைப்பட வெளியீட்டை ஒத்திவைப்பார்களா என்று சந்தேகம் எழுத்தது.இந்நிலையில் ‘கர்ணன்’ திரைப்படம் நாளை திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில், “சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின்படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்று எஸ்.தாணு பதிவிட்டுள்ளார்.
சொல்லியது சொன்னபடி எண்ணியது எண்ணியபடி
கர்ணன் வருவான்
மக்களை கலிப்பூட்டுவான்……உலகமெங்கும் 9-4-2021
திரையரங்குகளில் #Karnan @dhanushkraja— kalaipuli S Thanu (@TheVcraetion) March 30, 2021