தமிழகத்தில் கடற்கரைகளிலும் சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை- தமிழக அரசு அறிவிப்பு !!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதுகாப்பு கருதி அனைத்து கடற்கரைகளிலும் சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
அனைத்து கடற்கரைகளிலும் சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜன 1ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உணவகம் மட்டும் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *