கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 45 லட்சத்தைத் தாண்டியுள்ளது.அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 2659-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 86 ஆயிரத்தை கடந்துள்ளது.கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியைக் கடந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 11.76 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
