கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் 1,322 பேர் பலி மேலும் 19,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 38,71,825 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,322 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 09 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *