ஒரே நாளில் அமீரகத்தில் கொரோனாவுக்கு 16 பேர் பலி-அமீரக சுகாதார அமைச்சு

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 25 ஆயிரத்து 489 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 87 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 19 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது.இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,677 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 99 ஆயிரத்து 803 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 16 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,369 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *