மனித உரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குநர் கெனெத் ரொத் தெரிவித்துள்ளார்.டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது;
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை 22க்கு 11 என்ற அடிப்படையில் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கான எந்த பொறுப்புக்கூறலும் இல்லை என்பதை மனித உரிமை பேரவை அங்கீகரித்துள்ளதுடன் ராஜபக்ச அரசாங்கத்தை தொடர்ந்தும் கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
A major victory for the people of Sri Lanka: the UN Human Rights Council by a vote of 22 to 11 (14 abstain) recognizes the utter lack of accountability for war crimes in Sri Lanka and orders continuing scrutiny of the Rajapaksa government. @HRW background: https://t.co/VQsaZRurGO pic.twitter.com/cz8Bpz3lkU
— Kenneth Roth (@KenRoth) March 23, 2021