சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது.அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குயின்டன் டி காக் 2 ரன்னில் வெளியேறினார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.
ரோகித் சர்மா- சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். அவர் 36 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் விளாசினர்.அதன்பின் வந்த இஷான் கிஷன் 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் ரோகித் சர்மா 43 ரன்னில் வெளியேறினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 15.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் அந்த்ரே ரஸல் தொடர்ந்து விக்கெட் வீழ்த்த மும்ப இந்தியன்ஸ் சரியாக 20 ஓவரில் 152 ரன்னில் ஆட்டமிழந்தது. அந்த்ரே ரஸல் 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.