ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளையே இடம்பெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று வாக்கெடுப்பு இடம்பெறவிருந்த நிலையில் திட்டமிடல் சிக்கல்கள் காரணமாக நாளையே வாக்கெடுப்பு இடம்பெறும் என அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.தீர்மானத்தின் நகல் வடிவின் மீதான வாக்கெடுப்பு மார்ச் 23 ஆம் திகதி இடம்பெறும் எனத் தெரிவித்துள்ள அதிகாரியொருவர் ஆராயப்படவுள்ள முதலாவது தீர்மானம் என்ற அடிப்படையில் ஜெனீவா நேரப்படி காலை 9 மணிக்கு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் 193 நாடுகள் மத்தியில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் அதிகாரத்தைக் கொண்ட நாடுகள் 47 இடம்பெற்றுள்ளன. இவற்றில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .