ஐக்கியநாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் இலங்கையின் இறைமையில் தலையிடுகின்றது என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகளிற்கு பிரிட்டன் தலைமை தாங்குவது நட்பற்ற செயல் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு கிடைத்துள்ள தீர்மானத்தின் இறுதி நகல் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளதுடன் அதன் உள்ளடக்கம் ஒரு நாட்டின் இறையாண்மையை மீறும் வகையில் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாயத்தின் உறுப்பு நாடு என்ற வகையில் பிரிட்டனை பொறுத்தவகையில் இது நட்பற்ற செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.