எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு இருப்பவன் இந்த ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செஞ்சி, மைலம், திண்டிவனம் தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். மேலும், பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு கோரி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

நமது கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏதோ தேர்தலுக்காக வந்து போகிறவன் இந்த ஸ்டாலின் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு இருப்பவன் இந்த ஸ்டாலின்.எழைகளே இல்லாத நாடாக தமிழகத்தை ஆக்கப்போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்போது சொல்கிறார். இனிமேல்தான் அதை செய்யப்போகிறாராம். 4 வருடமாக முதல்வராக இருந்து என்ன செய்தீர்கள்?

ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் தனது உறவினர்கள், சம்பந்திகளுக்கு டெண்டர் கொடுப்பது, மாநில உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுப்பது, அடகு வைப்பது, அடிமையாக இருப்பது… இதைத்தானே செய்கிறீர்கள்.கடைசி நேரத்தில் அவருக்கு மக்கள் ஞாபகம் வந்திருக்கிறது. 10 ஆண்டாக ஆட்சியில் இருக்கிறார்கள், ஏழைகளுக்கு என்ன செய்தார்கள்?

தொழில்துறையை வளர்த்தார்களா? வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? விவசாயிகளை காப்பாற்றினார்களா? எதையும் செய்ததில்லை. இதேபோல் மத்தியில் உள்ள பாஜக அரசும் எதையும் செய்யவில்லை எனப்து எல்லோருக்கும் தெரியும்.அரசுப் பணத்தை தேர்தலுக்காக அதிமுக பயன்படுத்துகிறது. முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இனி கனவு காண முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *