உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தொடங்கிய 74-வது கேன்ஸ் திரைப்பட விழா 17-ம் தேதி வரை நடைபெற்றது.இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் காலேப் லாண்ட்ரி ஜோன்சுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருதை நார்வே நாட்டை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே வென்றார். புகழ்பெற்ற பால்ம் டோர் விருது டைடேன் எனும் பிரான்ஸ் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.