பிரித்தானியாவில் பரவியுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளன. அத்துடன், சமீபத்தில் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள், பிரித்தானியாவிலிருந்து வேறு நாடுகள் வழியாக வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.இந் நிலையில் உலகின் 60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் சமூக இடைவெளியை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.