உதயநிதி ஸ்டாலின் 3281 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாமக சார்பில் கசாலி, அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.தற்போதைய நிலவரப்படி உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். அவர் 3281 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கிறார். உதயநிதி 3933 வாக்குகளும், பாமக வேட்பாளர் கசாலி 652 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *