ஈரானிய வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஸரீஃப் வியாழக்கிழமை அமெரிக்கா மீது குற்றம் சாட்டினார் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயல்கிறார் ,
![](https://kannitamil.com/wp-content/uploads/2021/01/Zarif-Iran-Foreigen-Minister.jpg)
மேலும் தெஹ்ரான் தன்னை பலமாக பாதுகாத்துக் கொள்ளும் என்றார்.
ஜனாதிபதி டிரம்பும் கோவிட் உடன் சண்டையிடுவதுக்கு பதிலாக எமது பிராந்தியத்திற்கு
பி52 விமானத்தை அனுப்புவதற்கும் ஆயுதங்களை அனுப்புவதற்கும் பில்லியன்கணக்கில் செலவிட்டு வீணடிக்கின்றார் என டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர்
ஈராக்கிலிருந்து கிடைக்கும் புலனாய்வு தகவல்கள் அமெரிக்கா போருக்கான போலியான காரணங்களை உருவாக்குகின்றது என்பதை தெரிவிக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் யுத்தத்தை விரும்பவில்லை ஆனால் வெளிப்படையாகவும் நேரடியாகவும் தனது மக்களையும் பாதுகாப்பையும் நலன்களையும் பாதுகாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்