இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்குதல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் நாளை ஆறு இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன என்றும் முதற் கட்டமாக சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார் .
இரண்டாம் கட்டமாக பாதுகாப்புப் பிரிவினருக்கும் அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.