இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இலங்கை இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.இந்தியாவிலிருந்து 600,000 இலட்சம் மருந்துகள் இந்த வாரம் வரவுள்ளன மருந்துகள் வந்தவுடன் அதனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.முதலாவதாக 300,000 சுகாதார பணியாளர்கள் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முதலில் மருந்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.முதல்கட்ட நடவடிக்கைகள் முடிவடைந்து மூன்று வாரங்களில் அடுத்த கட்டம் ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கொவக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டின் 20 சதவீதமானவர்களிற்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும் ஏனையவற்றை அரசாங்கம் தனது செலவில் கொள்வனவு செய்து முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.