இலங்கை தேசிய கொடி அவமதிப்பு குறித்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை

இணைத்தின் ஊடாக பொருட்ளை விற்பனை செய்யும் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று இலங்கை தேசிய கொடியின் உருவத்துடனான கால் துடைப்பான் மற்றும் பாதணிகளை அதன் இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டுள்ளது.குறித்த நிறுவனம்இணையதளத்திலேயே குறித்த பொருட்கள் விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ளது.குறித்த பொருட்களை இலங்கையர்களும் பெற்றுக் கொள்ளும் வண்ணம் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.12 அமெரிக்க டொலருக்கு குறித்த கால் துடைப்பானை விற்பனைக்கு பதிவிட்டுள்ளதுடன் அதற்கான விநியோக கட்டணமாக 9 டொலர்கள் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் பாதணிகள் 20 டொலருக்கு விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ளதுடன் அதற்கான விநியோக கட்டணமாக 10 டொலர்கள் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் எமது செய்திப்பிரிவு வினவிய போது,இந்த விடயம் மிகவும் கவலையளிப்பதாகவும், இது தொடர்பில் இன்று காலை முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் வௌிநாட்டு அமைச்சு மற்றும் தூதரகங்கள் ஊடாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *