அரசாங்கம் பொதுமக்களின் உயிர்களை விட பணம் சம்பாதிக்கும் நடவடிக்கைகளிற்கே முன்னுரிமை வழங்குகின்றது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அரசாங்கம் தனது சகாக்களும் தனது நண்பர்களும் பெருமளவு இலாபம் சம்பாதிப்பதை உறுதி செய்வதற்காக பொதுமக்களின் உயிர்களை பலியிடுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் கண்காணிப்பின்கீழ் தரப்படுத்தல் அமைப்புகளின் தவறுகள் காரணமாக இலங்கை சுங்கத்தின் திறமையின்மை காரணமாக புற்றுநோயை உருவாக்ககூடிய பெருமளவு மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இலங்கைக்குள் நுழைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் சந்தையில் விடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நிறுவனங்கள் பெரும் இலாபம் சம்பாதிப்பதற்காக அரசாங்கம் மக்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.