இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணி இன்று முதல் மேல் மாகாணத்தில் ஆரம்பம்

இலங்கையில்  மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட, இதுவரை கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாத பிரஜைகளுக்காக திட்டமிடப்பட்ட விசேட மூன்று நாள் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (11) ஆரம்பமாக உள்ளது.

இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட மேல் மாகாணத்தில் வசிக்கும் பிரஜைகள் தொடர்பான தகவல்கள் கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தினால் திரட்டப்பட்டுள்ளன.

தடுப்பூசி வழங்கப்படும் திகதி, இடம், வருகைத்தர வேண்டிய நேரம் ஆகியவை அடங்கிய குறுங்தகவலொன்று கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தினால் உங்களது கையடக்கத் தொலைப்பேசிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மூன்று நாள் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் விபரங்கள் பின்வருமாறு,
அ. கொழும்பு மாவட்டம் – இராணுவ வைத்தியசாலை – நாராஹேன்பிட்ட (ஆகஸ்ட் மாதம் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகள்)
ஆ. கம்பஹா மாவட்டம் – மாவட்ட வைத்தியசாலை – கம்பஹா (ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகள்)
இ. களுத்துறை மாவட்டம் – மாவட்ட வைத்தியசாலை – களுத்துறை (ஆகஸ்ட் 12 ஆம் திகதி)

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட, கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாத அத்துடன் இதுவரை தமது தகவல்களை செயற்பாட்டு மையத்திற்கு வழங்காதவர்கள் அல்லது இவ்விசேட திட்டம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தேவைப்படுபவர்கள் 1906 எனும் தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *