இலங்கையில் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

இலங்கையில் 27 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியைப் பொதுமக்களுக்குச் சலுகை விலையில் வழங்குவதற்கான உடன்படிக்கை நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டது.இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை 08 ஆம் திகதி முதல் 3 மாத காலத்திற்கு 27 பொருட்களின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரி வித்தார்.குறித்த பொருட்களை சதோச, கூட்டுறவு மற்றும் கியூ கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என வர்த்தக அமைச்சில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இதோ:-

சிகப்பு அரிசி (ரத்து கெகுலு) 1kg : புதிய விலை 93 ரூபா – தற்போதைய விலை 106 ரூபா

வெள்ளை பச்சரிசி 1kg : புதிய விலை 93 ரூபா – தற்போதைய விலை 105 ரூபா

நாட்டரிசி (சுது நாடு) 1kg : புதிய விலை 96 ரூபா – தற்போதைய விலை 109 ரூபா

சம்பா 1kg : புதிய விலை 99 ரூபா – தற்போதைய விலை 120 ரூபா

கீரி சம்பா 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா

கோதுமை மா 1kg : புதிய விலை 84 ரூபா – தற்போதைய விலை 105 ரூபா

​வௌ்ளை சீனி 1kg : புதிய விலை 99 ரூபா – தற்போதைய விலை 110 ரூபா

சிகப்பு சீனி 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா

தேயிலை 100g : புதிய விலை 95 ரூபா – தற்போதைய விலை 130 ரூபா

பருப்பு அவுஸ்திரேலியா 1kg : புதிய விலை 165 ரூபா – தற்போதைய விலை 188 ரூபா

பெரிய வெங்காயம் இந்தியா 1kg : புதிய விலை 120 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா

உருளைக்கிழங்கு உள்நாடு 1kg : புதிய விலை 180 ரூபா – தற்போதைய விலை (216 – 220) ரூபா

உருளைக்கிழங்கு பாகிஸ்தான் 1kg : புதிய விலை 140 ரூபா – தற்போதைய விலை 190 ரூபா

கடலை 1kg : புதிய விலை 175 ரூபா – தற்போதைய விலை 225 ரூபா

காய்ந்த மிளகாய் 1kg : புதிய விலை 495 ரூபா – தற்போதைய விலை 550 ரூபா

ரின் மீன் உள்நாடு 425g : புதிய விலை 220 ரூபா – தற்போதைய விலை 240 ரூபா

ரின் மீன் இறக்குமதி 425g : புதிய விலை 265 ரூபா – தற்போதைய விலை 280 ரூபா

நெத்தலி தாய்லாந்து 1kg : புதிய விலை 545 ரூபா – தற்போதைய விலை 700 ரூபா

தோலுடன் கூடிய கோழி 1kg : புதிய விலை 400 ரூபா – தற்போதைய விலை 430 ரூபா

கட்டி உப்பு 1kg : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 55 ரூபா

பால்மா 400g : புதிய விலை 355 ரூபா – தற்போதைய விலை 380 ரூபா

​சோயா எண்ணை 500ml : புதிய விலை 310 ரூபா – தற்போதைய விலை 470 ரூபா

சவர்க்காரம் (BCC) 115g : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 53 ரூபா

சவர்க்காரம் 650g : புதிய விலை 260 ரூபா – தற்போதைய விலை 325 ரூபா

வாசனை சவர்க்காரம் 100g : புதிய விலை 56 ரூபா – தற்போதைய விலை 63 ரூபா

கை சுத்தீகரிப்பு (Hand sanitizer) 100ml : புதிய விலை 250 ரூபா – தற்போதைய விலை 350 ரூபா

முகக்கவசம் (SLS தரச் சான்றிதழுடன் கூடிய) : புதிய விலை 14 ரூபா – தற்போதைய விலை 25 ரூபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *