இலங்கையில் வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவுசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சமூக ஊடக பயனர்களை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்று கூறியுள்ளார்.
இந்த டிஜிட்டல் பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களை பெரிதும் பதிப்பதாகவும் இது நடுத்தர நிறுவனங்களை நேரடியாக பாதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் நாட்டை விட்டு பெரும் தொகை வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.