இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் கருத்தில்கொள்ளவில்லை அதன் பின்னர் இடம்பெற்ற ஜனநாய விரோத சம்பவங்களையும் கருத்தில் எடுத்துள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜேவியின் பிமல் ரத்நாயக்க செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.புதிய தீர்மானத்தில் ஐந்து விடயங்கள் காணப்படுகின்றன இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முடக்கியமை,இராணுவமயப்படுத்தல்,20வது திருத்தம் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுவது குறித்தும் தீர்மானத்தி;ல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உடல்களை தகனம் செய்தமை காணாமல் போனவர்கள் குறித்தஅலுவலகத்தின் பயனற்ற தன்மை குறித்தும் தீர்மானம்சுட்டிக்காட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.