இலங்கையில் புர்காவை தடை செய்யும் அமைச்சரவை பத்திரம் கையெழுத்தானது

இலங்கையில் புர்காவை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.களுத்துறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தனது தீர்மானத்திற்கான காரணங்களை தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் புர்கா இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகி;ன்றது என குறிப்பிட்டுள்ளார்.எஙகளது சிறுவயதில் பல முஸ்லீம் நண்பர்கள் எங்களுக்கு இருந்தனர் அவர்கள் புர்கா அணியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.புர்கா என்பது மத தீவிரவாதத்தின் குறியீடு என தெரிவித்துள்ள அமைச்சர் சமீபத்திலேயே இதனை பலர் பயன்படுத்த ஆரம்பித்தனர் ஆகவே இது நிச்சயமாக தடை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *