இலங்கையில் புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த விலையில் அரிசி!

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகள், சதொச மற்றும் கூட்டுரவு விற்பனை நிலையங்களில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அரசின் உத்தரவாத விலையின் கீழ் அரிசியினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, ஒரு கிலோ நாட்டரிசி 97 ரூபாவுக்கும், சிவப்பரிசி மற்றும் பச்சை அரிசி ஒரு கிலோ 95 ரூபாவுக்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சதொச தலைவர், கூட்டுரவு ஆணையாளர் மற்றும் அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளினதும் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுடன் இன்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *