இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டவிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் குறித்த தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரி வித்துள்ளார்.மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் சில எம்.பிக்கள் தடுப்பூசியைப் பெறுவதற்கு மறுத்துவிட்டனர்.பொதுமக்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் கொரோனாத் தொற்றால் அதிகளவாகப் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தே, அவர்கள் இவ்வாறு தடுப்பூசியைப் பெற மறுத்துவிட்டனர்.