இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய அறிவித்தல்.

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளில், தரம் 1 முதல் தரம் 5 வரையான வகுப்புக்கள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்ப்டுள்ளது.
மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை எதிர்வரும் 24 ஆம் திகதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *