இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட இரு சகோதாரர்களின் தந்தை ஜேவிபியின் தேசியப்பட்டியலிற்கு நியமிக்கப்பட்டமை குறித்து ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.இரு தற்கொலை குண்டுதாரிகளும் தாக்குதலை மேற்கொள்வதற்கு ஜஹ்ரான் ஹாசிமிற்கு 30 மில்லியனை வழங்கியுள்ளனர் என தெரியவந்துள்ளதாக சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.அவர்களது தந்தையை ஜேவிபி தேசிய பட்டியலிற்கு நியமித்துள்ளது இது குறித்து அனுரகுமார திசநாயக்க விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.