இலங்கையில் 1,000 ரூபா சம்பளம் தான் இன்று பேசும் பொருளாக உள்ளது. அது கிடைக்குமா அல்லது கிடைக்காத என்பது பலரது எதிர்ப்பார்ப்பாகும். ஆனால் நிறுவனங்கள் இதனை வழங்காமல் இருப்பதற்கு என்ன திட்டம் தீட்டினாலும் ஆயிரம் ரூபாவினையும் பெற்றுக்கொடுத்து தொழிலாளர்களையும் பாதுகாப்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயத்திட்டத்திற்கு 15 வருட பூர்த்தியினை முன்னிட்டு இன்று மாலை (18) டிக்கோயா வனராஜா பகுதியில் பிரஜாசக்திய நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரஜாசக்தி செயத்திட்டத்தின் பணிப்பாளர் நாயகமும் சட்டத்தரணியுமான பரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் 15 வருட பூர்த்தியினை முன்னிட்டு இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், பிரஜா சக்தி நிலையத்தில் தையல் பயிற்சி பெற்ற 30 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.இதன் மாணவர்கள் மற்றும் பிரஜசக்தி நிலைய பயிலுநர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் 15 வருட பூர்த்தியினை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டன.அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் மறைந்த தலைவர் தொண்டமானும் 15 வருடத்திற்கு முன்னாள் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் கணணி கல்வி தொழிற்பயிற்சி, நூலகம் என இந்த இளைஞர்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். அவர்கள் தூர நோக்கு பார்வையுடன் தான் வேலை செய்துள்ளனர். ஆனால் அன்று ஐந்து வருடத்திற்கு முன்னாள் இருந்த பிரஜசக்தி நிலையம் தற்போது இல்லை நல்லாட்சி அரசாங்கம் வந்தவுடன் சௌமிய மூரத்தி தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தினை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தார்கள்.
அதில் வேலை செய்தவர்களை மாற்றினார்கள். அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டார்கள். ஆனால் இன்று பெருமையாக உள்ளது 44 நிலையங்களையும் திரும்ப ஆரம்பிக்க முடியாவிட்டாலும் கூட ஒரு சில இடங்களில் மீள் ஆரம்பித்துள்ளோம். இந்த செய்த்திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக் முடியும் .இன்று இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் கணணி அறிவினை விருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
ஆனால் 15 வருடங்களுக்கு முன் ஆரம்பித்தாலும் கூட நமக்கு இன்னமும் அதனை பூர்த்தி செய்ய முடியாமல் போயுள்ளன.இன்று உங்களுக்கு தெரியும், எதனை எடுத்தாலும் ஆயிரம் ரூபாவை பற்றி மாத்திரம் தான் பேசப்படுகின்றன.ஆனால் அதனை தாண்டி பெற்றுக்கொடுக்க வேண்டிய எத்தனையோ விடயங்கள் உள்ளன. அதில் குறிப்பாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். அதற்கு தொழிற்சாலைகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் அதனை கொவிட் காரணமாக செய்ய முடியாமல் போய் உள்ளது.இந்த திட்டத்தினை பிரஜசக்தியின் மூலம் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். பாவப்பட்ட நிலையில் இருந்து தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தினை இன்று உயிர் கொடுத்துள்ளோம்.அதே நேரம் இன்று எதிர்கட்சியில் உள்ளவர்கள் பல்வேறு கையாலாகாத குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள.
நிறுவனங்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர் . நிறுவனங்கள் என்றால் அவர்கள் சட்டநடவடிக்கை எடுப்பார்கள். ஆகவே அதற்கு நாங்களும் சட்டநடவடிக்கை எடுப்போம். நாங்கள் தொழிலாளர்களிடம் வாங்கும் சந்தாவுக்காக அவர்களின் பாதுகாப்பினையும் உறுதி ப்படுத்துவோம. இதற்கு முன் தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் நிறுவனங்கள் சரியாக பெற்றுக்கொடுத்தது போல் பலர் பேசுகிறார்கள். கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் போனால் தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோய்விடும் என்று முன்னர் கூட்டு ஒப்பந்தம் வேண்டாம் என்றவர்கள் இன்று தெரிவித்து வருகிறார்கள். அவ்வாறு அவர்களை பாதுகாக்க முடியாதவர்கள் தொழிலாளர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் பாரத்துக் கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.