கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முகக்கவசம் அணியாமை மற்றம் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 திகதி தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் 3,202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தொடர்ந்தும் நாடு பூராகவும் இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.