இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, உடுவில் பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும், ஹொரபே பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், அகுரணை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் ராகமை பிரதேசத்தை சேர்ந்த 62 ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *