இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக ஆராய்வதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கை முஸ்லிம்களை மாலைதீவிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்காதமை தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் ட்விட்டரில் கவலை தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு தங்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் இறுதிச் சடங்கினை நடத்துவதற்கான உரிமைகளை இலங்கை அரசாங்கம் மதிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் முஸ்லிம்களின் உடலை மாலைதீவில் அடக்கம் செய்வது தொடர்பாக வரும் செய்திகளை இலங்கை அரசு மறுத்துள்ளது.இதனிடையே கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை தகனம் செய்ய இலங்கை அரசு தற்காலிக தடை விதித்துள்ளது குறிபிடத்தக்கது.