தமிழ் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சதொச வலையமைப்பின் ஊடக நிவாரண பொதியொன்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
10 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய குறித்த உணவுப் பொதியை ஆயிரம் ரூபாய்க்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் சதொச ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், 27 அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி சதொச ஊடாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.