இலங்கையில் இன்று மட்டும் 970 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று 970 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் கொரோனா தொற்று உள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 123,308 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,335 பேர் இன்று (07) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 103,098 ஆக அதிகரித்துள்ளது.மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 764 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *