இலங்கையில்இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட பத்திரிகையாளர் சுஜீவ கமகேவை போலி குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவரை இன்று கைது செய்துள்ள பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.சுஜீவ கமகே தன்னை பத்தாம் திகதி இனந்தெரியாதவர்கள் மீரிகம பகுதியில் வைத்து கடத்தி சித்திரவதை செய்த பின்னர் தெமட்டகொடையில் விடுவித்தனர் என இதன்போது தெரிவித்திருந்தார்.தான் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.எனினும் விசாரணையின் போது அவர் தனக்குத்தானே காயங்களை ஏற்படுத்திக்கொண்டார் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.சிசிடிவி கமராக்கள் அவர் நீர்கொழும்பிலிருந்து தெமட்டகொடவிற்குச் சென்று பின்னர் திம்பிரிகஸ்யாயவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ணவின் வீட்டிற்குச் சென்றார் என்பதைக் காண்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இது குறித்து சதுர சேனாரட்ணவை விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.