இலங்கையில் அனைத்து வகுப்பு மாணவர்களும் வகுப்பேற்றப்பட வேண்டும் – இலங்கை கல்வி அமைச்சு

2020 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலம் இன்று நிறைவடைகிறது அத்துடன் அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி முதல் கல்வி நட வடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக, தரம் 1-5 வரையான வகுப்புகளின் கற்றல் நடவடிக்கைகள் ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் கல்வி அமைச்சின் அறிக் கையில் அனைத்து வகுப்புகளும் ஜனவரி 11 ஆம் திகதியே ஆரம்பமாகும் என்று தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த ஆண்டு நிறைவடையும்போது, அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு வகுப்பேற்றப்பட வேண் டும் என்றும் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

இதன்படி 2021 ஆம் ஆண்டு புதிய பாடசாலை தவணை யின்போது, மாணவர்கள் வகுப்பேற்றப்பட்ட வகுப்பில் கல்வி கற்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *