இலங்கையில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 95,018 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *