பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது
கொரோனா தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவை பெற்றுத் தருவதாக
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு உறுதி வழங்கியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர்,
உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் ராஷியா பெண்டிசே மற்றும் யுனிசெப்
அமைப்பின் பிரதிநிதி டிம் சுடன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.