ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியது.சுவிஸர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெறும் கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இதேவேளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன சற்றுமுன்னர் இணையத்தளத்தின் ஊடாக மகாநாட்டில் உரையாற்றியுள்ளார்.இதன்போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் நிராகரிக்குமாறு உறுப்பு நாடுகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.