இலங்கை சீனாவிடம் சரணடையவில்லை என வெளிவிவகார அமைச்சின செயலாளர் அட்மிரல் ஜயநத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இலங்கை தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்தில், இலங்கை சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக தனது இறைமையை நிலைநாட்டினால் மாத்திரமே நிதி உதவி வழங்கப்படும் என அமெரிக்க நிபந்தனை விதித்துள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் வெளிவிவகார செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை எந்த நாட்டிடமும் தனது இறைiமையை கையளிக்கவில்லை ,இந்தியா சீனாவிடம் கூட இலங்கை சரணடையவில்லை என வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எங்கள் இறைமை குறித்து அவதானமாகயிருக்கின்றோம் என தெரிவித்துள்ள வெளிவிவகார செயலாளர்
இது குறித்து எந்த நாடும் விசேடமாக எங்களுக்கு தெரிவிக்கவேண்டியதில்லை,ஏனென்றால் எங்களிற்கு இறமையை எவரிடமும் கையளிக்கும் எண்ணமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நிபந்தனைகள் குறித்து பார்த்துள்ளேன் ஆனால் உரிய முறையில் ஆராயமால் எதனையும் தெரிவிக்க முடியாது அமெரிக்கா தெரிவித்திருப்பது என்னவென்பதும் சரியாக எனக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் எங்களிற்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.