இயல்பு நிலை திரும்புகிறது பிரான்ஸ் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது

பிரான்சில் 30 சதவீத மக்களுக்கு கொரோன தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். கடந்த ஓராண்டில் மூன்றாவது முறையாக ஊரடங்கு கட்டுபாடுகள், நேற்று முன் தினம் தளர்த்தப்பட்டது.திரைப்பட அரங்குகள், உணவு விடுதிகள், அத்தியாவசியப் பொருட்கள் அல்லாத இதர கடைகளும் திறக்கப்பட்டன. வளர்ந்த நாடுகளில் பிரான்ஸ் நாட்டு மக்கள் தான் மிக அதிகமாக உணவு விடுதிகளில், பொது இடங்களில் கூடிக்களிப்பதாக வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது.

தெற்கு பிரான்சில் உள்ள, புகழ்பெற்ற ரிவெய்ரா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மிக அழகான நைஸ் நகருக்கு உலகெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நைஸ் நகரின் கடற்கரை விடுதி ஒன்றில் திறந்தவெளி மேசைகளில் அமர்ந்து, பிரெஞ்சு தம்பதிகள், அரிய வகை வைன்களை குடித்து மகிழ்கின்றனர்.பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள லே வின்சென்னே திரையரங்கு திறக்கப்பட்டவுடன் நேற்று முன் தினம் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்காக ஓடின. சமூக இடைவெளி காரணமாக 35 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், டிக்கெட் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். திரையரங்குகளில் ஜூன் 9 முதல் 65 சதவீதமும், ஜூன் 30 முதல் 100 சதவீத இடங்களுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் அல்லாத இதர பண்டங்களை விற்பனை செய்யும் கடைகள், மால்களும் திறக்கப்பட்டுள்ளதால், கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பாரிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற பிரிண்டெம்ஸ் விற்பனையகத்தில் வாடிக்கையாளர்கள் பல்வேறு பொருட்களை வாங்கி மகிழ்ந்தனர். பிரான்ஸ் நகர தெருக்கள் தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *