நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியாகியுள்ளது.இப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து எல்லோராலும் பாராட்டப்படுபவர் மகேந்திரன். விஜய் சேதுபதி இளம் வயதில் எப்படி சமூக விரோதியாக மாறுகிறார் என்பதே பிளாஷ்பேக்காக வரும்.இந்நிலையில் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த இடத்தை கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று பதிவு செய்து இருக்கிறார்.
எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த இடத்தை கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️ Love u all 😘#Master 🔥 FDFS @RohiniSilverScr 🥳@imKBRshanthnu @Karthi_Prasanna pic.twitter.com/bpuDDxIrKe
— Master Mahendran 🌟 (@Actor_Mahendran) January 13, 2021