இந்திய அணியின் அதிரடி ஆட்டகாரர் யூசுப் பதான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார் அதிரடி ஆட்டகாரர் யூசுப் பதான் . கொல்கத்தா அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இருந்தார். அதேபோல் 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தார்.இவர் தற்போது கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.38 வயதாகும் யூசுப் பதான் இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 810 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 சதம், 3 அரைசதம் அடங்கும். 33 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 22 டி20 போட்டிகளில் விளையாடி 236 ரன்கள் அடித்துள்ளார். 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.2007-ம் ஆண்டு டி20-யிலும், 2008-ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.‘‘எனக்கு ஆதரவாக இருந்து என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், அணிகள், பயிற்சியாளர்கள், நாட்டின் அனைத்து ஆதரவாகர்கள் என அனைவருக்கும் நன்றி. அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கான நேரம் இன்று வந்துள்ளது. நான் அதிகாரப்பூர்வமாக அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்.இரண்டு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்தது, உலகக்கோப்பையை வென்று சச்சினை தோளில் சுமந்து சென்றது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணம்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *