கடந்த வாரம் சீரம் மற்றும் பாரத்பயோடெக் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது .இந்நிலையில் இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் வரும் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக நாடு முழுதும் உள்ள மூன்று கோடி சுகாதார பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 50 வயதைக் கடந்த 27 கோடி பேருக்கும், அதன் பின்னர் மற்றவர்களுக்கும் தடுப்பூசி திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.