தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இப்படம் பல்வேறு தடைகளுடன் வெளியாகியும் கூட ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் போலவே அப்படத்தின் பாடல்களும் இந்தியளவில் வைரலானது. இதனிடையே இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மாஸ்டர் திரைப்படத்தின் டேக்கை தான் அதிக முறை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் – (7.3 M), யூடியூப் – (483 K).மேலும் இந்தியளவில் எந்த திரைப்படமும் இது போன்ற சாதனையை படைத்ததில்லை என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.