இந்தியர்களுக்கான தடையை நீக்கியது நெதர்லாந்து அரசு

கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கத்தின் தீவிரத்தால் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கத் தொடங்கின.இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு நெதர்லாந்து தடை விதித்தது. இந்த தடையானது ஜூன் 1-ம் தேதி வரை இருக்கும் என நெதர்லாந்து அரசு தெரிவித்திருந்தது.இந்நிலையில், இந்திய பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நெதர்லாந்து அரசு நீக்கியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவலைப் பதிவிட்டுள்ளது.எனினும், கொரோனா பெருந்தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இருந்து ஐரோப்பிய யூனியனை சாராத பயணிகள் வருவதற்கு ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே விதித்த தடை தொடர்ந்து அமலில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *