அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். பா.இரஞ்சித் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘இறுதிச்சுற்று’, ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘பைரவா’, ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார் சந்தோஷ் நாராயணன்.
அடுத்ததாக தனுஷின் ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சியான் 60 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன்.
இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பறை இசை கலைஞர்கள் சுற்றி நின்று வாசிக்க, சந்தோஷ் நாராயணன் நடுவில் குத்தாட்டம் போடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், சந்தோஷ் நாராயணனை வியந்து பாராட்டி வருகின்றனர்.
Post session fun with my dearest folk band for #Chiyyan60. 🥁🥁@karthiksubbaraj pic.twitter.com/iZku4DMVHV
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 28, 2021