நியூசிலாந்து அணி இங்கிலாந்து சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பென் போக்ஸ் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.கவுன்ட்டி சாம்பியன்ஷப் போட்டியில் சர்ரே அணிக்காக பென் போக்ஸ் விளையாடி வருகிறார். ஓவலில் மிடில்சக்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இடம்பிடித்து விளையாடி வந்தார். வீரர்கள் அறையில் நடந்து வரும்போது காலுறை மாட்டி கீழே வழுக்கி விழுந்தார்.
இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் சரியாக மூன்று வாரங்களுக்கு மேல் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விலகியுள்ளார்.இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது, கடுமையான டர்னிங் ஆடுகளத்தில் சிறப்பான வகையில் விக்கெட் கீப்பர் பணியை செய்தார். அதோடு பேட்டிங்கிலும் அசத்தினார். இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 8 போட்டிகளில் விளையாட இருக்கிறது. அப்போது பென் போக்ஸ் விளையாட வாய்ப்புள்ளது.முதல் டெஸ்ட் 2-ந்தேதியும், 2-வது டெஸ்ட் 10-ந்தேதியும் தொடங்குகிறது.