இங்கிலாந்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது-உலக சுகாதார நிறுவனம் தகவல்

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் இங்கிலாந்துக்கு விமானம், ரெயில் போக்குவரத்துகளை பல நாடுகளும் துண்டித்து உள்ளன.

இந்த வைரசின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றி இன்னும் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை.

அதன் தன்மைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் கேபிரியேசஸ் கூறும்போது, வைரஸ் கிருமி உருமாற்றம் அடைவது என்பது இயற்கையானது.

இதுபோன்ற மாற்றங்கள் வரும் என்பது எதிர் பார்த்ததுதான். ஆனால் இதுபற்றி சரியான தகவல்கள் இல்லாமல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாதங்களை செய்கிறார்கள்.

இங்கிலாந்தில் இருந்து வந்துள்ள அறிக்கையில் இந்த வைரசின் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது என்றே கூறியுள்ளனர்.

ஆனால் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இதுவரை எந்த மருத்துவ ஆதாரமும் தென்படவில்லை.

இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன் முடிவுகள் தெளிவுபடுத்தும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *